அக்கராயன் கோட்டைகட்டிய குளம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த விண்ணக மண்ணக அரசி அன்னை ஆலய திறப்புவிழா சித்திரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அக்கராயன் கிராம மக்களென பலரும் கலந்துசெபித்தனர்.

By admin