யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை ஆண்ட்ரே ஜோஸ்வோவிச் அவர்களை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு சித்திரை மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள வத்திக்கான் தூதரகத்தில் நடைபெற்றது.
திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக நியமனம் பெற்ற பின்னர் உத்தியோகபூர்வமாக நடைபெற்ற முதலாவது சந்திப்பாக இது அமைந்துள்ளது.
