மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை மன்னார் கியூரியா ஆச்சேஸ் விழா சித்திரை மாதம் 22ஆம் திகதி புதன்கிழமை சாந்திபுரம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றது.
சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, சிறப்பு பவனி, மரியாயின் சேனை சங்கிலி செபம், திருப்பலி, அர்ப்பண வாக்குறுதிகளை புதுப்பித்தல், நற்கருனை ஆராதனை என்பன இடம்பெற்றன.
பள்ளிமுனை, எமில் நகர் செபஸ்ரியார் பேராலயம், சாந்திபுரம், ஜீவநகர், கீரி, தாழ்வுபாடு, கொன்னையன் குடியிருப்பு ஆகிய பிரசிடியங்கள் ஒன்றாக இணைந்த இந்நிகழ்வுகளில் 200ற்கும் அதிகமான சேனை அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

