உடுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆர்க் மாற்றுத்திறனாளிகள் இல்ல விளையாட்டுப்போட்டி சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆர்க் பாடசாலை அதிபர் அருட்சகோதரி சாந்தினி சாந்தலிங்கம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இல்ல தலைவி அருட்சகோதரி தியோபின் குருஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் உடற்பயற்சியுடன் விளையாட்டுக்களும் இடம்பெற்றன.
விளையாட்டு நிகழ்வில் கரட் உண்ணும் முயல், எண்ணிற்கேற்ப பாய்ந்து செல்லுதல், உறவுகளை இணைத்தல், பொம்மை வாயினுள் இடுதல், சொல்லாக்குதல், தியானித்து செயற்படுதல், விளையாட்டுடன் குட்டி யோகா, சீராக்கி நடத்தல், இசையும் அசைவும், தடை தாண்டி சந்தை செல்லுதல், வேறுபடுத்தி வெற்றி காணல், பொருத்தமாக அணிந்து செல்லுதல், சேமிப்பு, ஒழுங்குபடுத்துதல், கேள்வித்திறன், முயற்சித்தல், வேகமாக பிஸ்கட் உண்ணுதல் போன்ற விளையாட்டுக்களும் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களுக்கான விளையாட்டுக்களும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் உடுவில் வடக்கு J/185 பிரிவு கிராம சேவகர் செல்வி உதயனுஜா உதயராஜா அவர்கள் பிரதம விருந்தினராகவும் மல்வம் – உடுவில் பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் திருக்குடும்ப கன்னியர் மட யாழ். மாகாண ஆலோசகர் அருட்சகோதரி வயலட் ஸ்ரனிஸ்லஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

