யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம் மே மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

கழகத் தலைவர் திரு செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் தலைமையில் மறைக்கோட்ட கழக இயக்குநர் அருட்தந்தை றொகான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கோட்ட எழுச்சி நாள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் உட்பட 40 வரையான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

By admin