தொழிலாளர்களின் பாதுகாவலராம் புனித சூசையப்பரின் திருவிழாவையும் தொழிலாளர் தினத்தையும் சிறப்பித்து குருநகர் மீன் விற்பனை நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு மே மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கடற்தொழில் உபகரணங்கள், விற்பனை நிலையங்கள் ஆசீர்வதிப்பும் தேனீர் உபசரணையும் நடைபெற்றது.
குருநகர் மீன் விற்பனை நிலையத்தில் நடைபெற்ற திருப்பலியை குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுக்க உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்ரி றொகான் அவர்கள் தொழில் மற்றும் தொழிலாளர்களின் மேன்மை பற்றியும், புனித சூசையப்பரின் வாழ்வு, பரிந்துரை பற்றியும் மறையுரையாற்றினார்.
இந்நிகழ்வில் 600 வரையான மீனவ குடும்பங்கள் கலந்துகொண்டனர்.

