இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழா சிறப்பு நிகழ்வான “கலை மாலைப் பொழுது” கலை நிகழ்வு சித்திரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் தலைமையில் யூபிலி கலைக்குழுவின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளவாலை புனித யூதாததேயு ஆலய உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய அமரர் அருட்தந்தை அன்ரன் இராஜநாயகம் அவர்களின் பெயரில் அன்றைய நாள் கலை அரங்கு திறக்கப்பட்டு அருட்தந்தையின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு கலைக்குழு தலைவர் திரு. றொபின்சன் அவர்களின் அரங்கத் திறப்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை யோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும், கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் திரு. வே. சிவராசா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், யாழ். கல்வி வலய நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரிய ஆலோசகரும் திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநருமான திரு. ஜோண்சன் ராஜ்குமார் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் குழுப்பாடல்கள், நடனங்கள், நாடகங்கள், கௌரவிப்புக்கள், பரிசளிப்புக்கள் என்பன இடம்பெற்றதுடன் சிறப்பு நிகழ்வாக கலைக்குழு தலைவர் திரு. றொபின்சன் அவர்களின் நெறியாள்கையில் “யார் குற்றவாளி” குறுநாடகமும், “QR மணமகன்” நகைச்சுவை நாடகமும் மேடையேற்றப்பட்டன.

By admin