பண்டத்தரிப்பு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 54 மாணவர்கள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.
