இளவாலை புனித யூதாததேயு ஆலய 50ஆவது பொன் விழா ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் தொடர்ந்து யூபிலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

யூபிலி நிகழ்வில் “மேற்குதயம்” யூபிலி மலரும் “ததேயு நாத யூபிலி கானங்கள்;” இறுவட்டும் ஆயர் அவர்களால் வெளியிட்டுவைக்கப்பட்டன.

திரு. விஜயகுமார் அவர்களின் இசையில் திரு. யேசுதாஸ் அவர்களின் இசை இயக்கத்தில் சென் யூட் கிராமத்தை சேர்ந்த கலைஞர்களின் எழுத்துருவில் அவர்களால் பாடப்பட்ட 11 பாடல்களை உள்ளடக்கிய “ததேயு நாத யூபிலி கானங்கள்” இறுவட்டுக்கான ஆய்வுரையை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை யூட் கரோவ் அவர்களும் “மேற்குதயம்” பொன்விழா மலரிற்கான ஆய்வுரையை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்புராசா அவர்களும் வழங்கினர்.

இந்நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin