கோப்பாய் வடக்கு புனித சூசையப்பர் ஆலய அபிசேக விழாவும் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வும் சித்திரை மாதம் 20ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்து 34 மாணவர்களுக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கினார்.
இத்திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

