பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை இன்று புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை S.J.Q ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கருத்துரை, கழகத்தின் கடந்தகால எதிர்கால செயற்பாடுகள் மற்றும் சமூக தொடர்பாடல் ஆண்டை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், குழுச்செயற்பாடுகள் என்பன இடம்பெற்றன.
அருட்தந்தை சந்திரபோஸ் அவர்கள் கலந்து குடும்பங்களின் அன்மீக செயற்பாடுகள் என்னும் தலைப்பில் கருத்துரையை வழங்கினார்.
பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் 30 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

