சமூக தொடர்பாடல் ஆண்டு சிறப்பு கருத்தமர்வு மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவருடன் இணைந்த குழுவினர் பங்குமக்களுக்கான கருத்தமர்வையும் மறைக்கல்வி மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளையும் முன்னெடுத்தனர்.
குழுவிளையாட்டுக்கள் கருத்துரைகள் குழு ஆய்வுகள் கலந்துரையாடல் விழிப்புணர்வு பட காட்சிப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்நிகழ்வில் 100ற்கும் அதிகமான பங்குமக்களும் மறைக்கல்வி மாணவர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

