யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான வளவாளர் வதிவிட பயிற்சி மாசி மாதம் 7,8 ஆம் திகதிகளில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தில் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோன் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “எதிர்கால வளவாளர்களை உருவாக்கும் நோக்கில் சமூகத்தொடர்பும் தலைமைத்துவமும்” எனும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள், திருப்பலி, நற்கருணை வழிபாடு, கலந்துரையாடல், அனுபவ பகிர்வு என்பன இடம்பெற்றன.
இறுதிநாள் நிகழ்வுகளில் பங்குபற்றிய இளையோருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் மற்றும் அகவொளி குடும்ப நலநிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

