திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் தலைமையில் அருட்சகோதரி செறின் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொடியேற்றப்பட்டு ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை அமலதாஸ் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து சிறார்களின் கலைநிகழ்வுகளும் உணவு பகிர்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சிறார்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.
அத்துடன் மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலய டொன் பொஸ்கோ இளையோர் மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட புனித டொன் பொஸ்கோ திருவிழாவும் மாசி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

