மிருசுவில் புனித நீக்கிலார் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிருசுவில் புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை S.J.Q. ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கழக அங்கத்தவர்கள், முன்னாள் அங்கத்தவர்கள், பங்குமக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து இரத்ததானம் வழங்கியதுடன் இம்முகாமில் இணைந்துகொண்ட குருதிக்கொடையாளர்களுக்கான நினைவு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

70 வருடங்களிற்கு மேலான வரலாற்றை கொண்ட புனித நீக்கிலார் கழகத்தின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பல்வேறு காலகட்டங்களில் சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் பங்காற்றி மறைந்த கழக அங்கத்தவர்களை கௌரவித்து அவர்களை நினைவுகூரும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட வருடாந்த இரத்ததான முகாம் இரண்டாவது ஆண்டாக இவ்வருடம் இடம்பெற்றது.

By admin