யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடமும் யாழ்ப்பாண அருள் ஆச்சிரம குழுமமும் இணைத்து முன்னெடுத்த புனித லூர்து அன்னை திருவிழா மாசி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ்ப்பாண கோவில் வீதியில் அமைந்துள்ள அருள் ஆச்சிரமத்தில் நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா திருப்பலி நிறைவில் கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் தலைமையில் நற்கருணை ஆராதனை இடம்பெற்றது.
இவ்வழிபாடுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், குருமட மாணவர்கள், இறைமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.

