மன்னார் மறைமாவட்டம் வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையில் அமைக்கப்பட்ட மருதமடு அன்னை திருச்சொருப திறப்புவிழா மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் மற்றும் உப அதிபர் அருட்தந்தை விமல்றோய் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து அன்னையின் திருச்சொருபத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.

