திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை தாதியர் நிலையத்தில் தாதியர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தாதியர் தொப்பி வழங்கும் நிகழ்வு மாசி மாதம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிலைய பொறுப்பாளர் அருட்சகோதரி ஜெரால்டின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் மூன்று ஆண்டு கால தாதியியல் டிப்ளோமாவை நிறைவு செய்த 15 பேர், தாதிய உதவியாளர் கற்கைநெறியை பூர்த்தி செய்த 13 பேர் மற்றும் பராமரிப்பாளர்கள் 4 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
பிராந்திய சுகாதார சேவை உதவி இயக்குநர் வைத்தியர் குமாரவேல் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், தாதிய மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

