இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட கரோல் பாடல் போட்டியின் தமிழ்மொழி மூலமான போட்டியில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்ட சுன்னாகம் பங்கு ஆலயங்களின் பாடகர் குழாமினருக்கான கௌரவிப்பு நிகழ்வு மாசி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் திருப்பலியும் திருப்பலி நிறைவில் பங்கேற்பாளர்களுக்கான கௌரவிப்பும் நடைபெற்றன.

கௌரவிப்பு நிகழ்வில் பாடல் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

தொடர்ந்து மருதமடு அன்னை வருகையின் நினைவாக ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட மருதமடு அன்னையின் திருச்சொருபமும் குருமுதல்வர் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.

By admin