யாழ். மறைமாவட்ட இறைதியான இல்லத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள இறைதியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாசி மாதம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இறைதியான இல்ல இயக்குநர் அருட்தந்தை லோரன்ஸ், மற்றும் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தையும் யாழ். மறைமாவட்ட காணி உறுதிகளை நிர்வகிப்பவருமான அருட்தந்தை ஆனந்தகுமார் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து புதிய தியான இல்லத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

By admin