மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை ஆராதனை திரிதின வழிபாடுகள் தை மாதம் 31ஆம் மற்றும் மாசி மாதம் 1,2 ஆம் திகதிகளில் கன்னியர் மட சிற்றாலயத்தில் இடம்பெற்றன.

மானிப்பாய் குழும அருட்சகோதரிகளின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதல்நாள் ஆராதனையை திருக்குடும்ப அருட்சகோதரிகளும் இரண்டாம், மூன்றாம் நாள் ஆராதனைகளை திருக்குடும்ப பொதுநிலையினர் மற்றும் திருக்குடும்ப இளையோரும் சிறுவர்களும் சிறப்பித்தனர்.

1822 ஆண்டு மாசி மாதம் 03ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் போர்டோவின் திருக்குடும்ப சபைக்கு அளிக்கப்பட்ட நற்கருணை ஆண்டவரின் காட்சியின் நினைவாக வருடாந்தம் இவ்வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin