இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியும் திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலயமும் இணைந்து முன்னெடுத்த வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி மாசி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

பாடசாலைகளின் அதிபர்கள் அருட்தந்தை மைக் மயூரன் மற்றும் அருட்சகோதரி அமிர்தா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்; வட மாகாண கல்வி நிர்வாக மேலதிக கல்வி பணிப்பாளர் திரு. கந்தையா பிறட்லி ஜெனார்ட் அவர்கள் பிரதம விருந்தினராகவும் புனித ஹென்றியரசர் கல்லூரியின் பழைய மாணவரும் யாழ்ப்பாண தபால் திணைக்கள பிராந்திய கணக்காளருமான திரு. வல்லவராயன் றதீஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. சிவபாதசுந்தரம் சிவகுமார் மற்றும் வவுனியா கோபிதன் கார்மென்ட் pvt ltd நிர்வாக இயக்குநர் திருமதி கோகிலாதேவி அசோக்குமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

By admin