விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு வைகாசி மாதம் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு அருட்சகோதரிகளின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இச்சந்தை நிகழ்வை தென்னிந்திய திருச்சபை அருட்பணியாளர் டானியல் மோகன் அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.

இந்நிகழ்வில் சிறார்களால் பழங்கள், காய்கறிகள், விளையாட்டுப்பொருட்கள், உணவுப்பொருட்கள், உடைகள், கற்றல் உபகரணங்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டன.

தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்கள் கலந்து ஆசியுரை வழங்கியதுடன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் திரு. அகிலன், முல்லைத்தீவு பாரதி மகாவித்தியாலய அதிபர் சிரஞ்சினி, அருட்சகோதரிகளின் பளை இல்லத்தலைவி அருட்சகோதரி ஸ்ரெலா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இச்சந்தை நிகழ்வில் முன்பள்ளியில் கல்விபயிலும் 65 சிறார்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin