பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

04ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை ஜோண்சன் ஜோண் ஹில்ரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin