யாழ்ப்பாண கல்விவலய பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கிடையிலான செயல்பட்டு மகிழ்வோம் போட்டி வைகாசி மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தரம் 03, தரம் 04 மாணவர்கள் ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று யாழ்ப்பாண கல்வி வலய சம்பியன் பட்டத்தை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியதுடன் தரம் 05 மாணவர்கள் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் யாழ்ப்பாண கல்விவலய பாடசாலைகளின் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான மேசைப்பந்தாட்டப் போட்டியும் வைகாசி மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியின் இறுதியாட்டத்தில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியை வென்று யாழ்ப்பாண கல்வி வலய சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது.

மேலும், யாழ்ப்பாண கல்விவலய பாடசாலைகளின் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் வைகாசி மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி மூன்றாமிடத்துக்கான ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை 39:34 புள்ளிகள் என்ற விகிதத்தில் வென்று மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

 

By admin