மணற்காடு புனித அந்தோனியர் ஆலயத்தில் முதல்நன்மை அருட்சாதனம் பெறவுள்ள சிறார்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை கண்காட்சி வைகாசி மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களால் நற்கருணையின் புதுமைகள், நற்கருணை பற்றிய இறைவார்த்தைகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.

இக்கண்காட்சியில் 11 சிறார்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin