யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் புனரமைப்புச்செய்யப்பட்ட ஆரம்பப் பிரிவு மாணவர்களின் சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்புவிழா வைகாசி மாதம் 11ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் திரு. லெனின்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலய உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை றொகான் டியோனி அவர்கள் கலந்து ஆசியுரை வழங்கி புனரமைப்பு செய்யப்பட்ட பூங்காவை ஆசீர்வதிக்க பிரான்ஸ் பழைய மாணவர் சங்க தலைவர் திரு. டேவிட் அன்ரன் ராஜ்குமார் அவர்கள் அதனை திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் இம்மனுவேல் தயாளன், யாழ். கல்வி வலய கிறிஸ்தவ பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. விக்ரோறியா, யாழ். மரியாள் வித்தியாலய அதிபர் கெனத்மேரியன், பழைய மாணவர் சங்கத் செயலாளர் சிறிசுதாகரன், விழாக் குழுத்தலைவர் தபேந்திரன். மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இப்புனரமைப்பு பணிக்கான நிதியுதவியை பிரான்ஸ் பழைய மாணவர் சங்க தலைவர் திரு. டேவிட் ராஜ்குமார் அவர்கள் தனது மனைவியும் பாடசாலையின் பழைய மாணவியுமாகிய அமரர் ஆன்றோஸ் ராஜ்குமார் அவர்களின் நினைவாக வழங்கிவைத்தார்.

