யாழ். மறைமாவட்ட குருவும் பலாலி பங்குத்தந்தையுமான அருட்தந்தை செபஸ்ரியன் றோய் பேடினன்ட் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு வைகாசி மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை பலாலி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்களின் தலைமையில் நன்றித் திருப்பலியும் தொடர்ந்து அருட்தந்தைக்கான கௌரவிப்பும் அருட்தந்தையின் குருத்துவ யூபிலியை சிறப்பித்த வெள்ளிவிழா மலர் வெளியீடும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், இறைமக்கள், அருட்தந்தையின் குடும்ப உறவினர்களென பலரும் கலந்துகொண்டனர்.

