பெல்ஜியம் நாட்டில் அமைந்துள்ள மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை திருத்தலத்தில் அமைக்கப்பட்ட மருதமடு அன்னை சிற்றாலய திறப்புவிழா வைகாசி 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகத்தின் ஏற்பாட்டில் பணியக இயக்குநர் அருட்தந்தை ஜோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் கலந்து சிற்றாலயத்தை ஆசீர்வதிக்க லியெச் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை எரிக் டி பியூக்லேர் மற்றும் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் ஆகியோர் இணைந்து சிற்றாலயத்தை திறந்துவைத்தனர்.

By admin