திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான வாழ்கை தெரிவிற்கான வழிகாட்டல் கருத்தமர்வு சித்திரை மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகள் கலந்து கருத்துரை, குழுச்செயற்பாடுகள், தலைமைத்துவ பயிற்சி ஊடாக மாணவர்களை வழிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 125 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

