உலக தொடர்பாடல் தினத்தை முன்னிட்டு யாழ். மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி மறைமாவட்ட சமூக தொடர்பு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.

திருப்பலியை யாழ். மறைக்கோட்ட முதல்வரும் பேராலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இத்திருப்பலியில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம், யாழ். புனித வளனார் அச்சகம் மற்றும் மறைமாவட்டத்தில் பணியாற்றும் ஏனைய கத்தோலிக்க ஊடக பணியாளர்கள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

1967ஆம் ஆண்டு அப்போதைய திருத்தந்தை 06ஆம் சின்னப்பர் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட உலக தொடர்பாடல் தினம் ஒவ்வாரு வருடமும் இயேசுவின் விண்ணேற்ற பெருவிழாவன்று கொண்டாடப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin