யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள் வைகாசி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கோட்ட கழக இயக்குநர் அருட்தந்தை ஜோண் ஹில்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி, சிறப்புரை, விழிப்புணர்வு வீதி நாடகம், கலைநிகழ்வுகள், கழக கூட்டம், முன்னாள் மறைக்கோட்ட இயக்குநர்களுக்கான கௌரவிப்பு என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் குருநகர் கடற்கரை வீதியிலிருந்து பிராதன வீதியூடாக குருநகர் புனித யாகப்பர் ஆலயம் வரையான போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியும் தொடர்ந்து ஆலய மண்டபத்தில் சிறப்புரையும் இடம்பெற்றன.
சிறப்புரையை திருவுள சபை அருட்தந்தை பிராங் டவ் அவர்கள் “போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக தொடர்பாடல சாதனங்களின் நன்மை தீமை” என்னும் தலைப்பில் வழங்கினார். சிறப்புரை நிறைவில் புனித யாகப்பர் ஆலய வளாகத்தில் பீடப்பணியாளர்களால் சமூக தொடர்பாடல் சாதனங்களின் நன்மை தீமை தொடர்பான வீதி நாடக ஆற்றுகை இடம்பெற்றது.
தொடர்ந்து கழக கூட்டமும் கலைநிகழ்வுகளும், முன்னாள் மறைக்கோட்ட இயக்குநர்கள் அருட்தந்தையர்கள் றொகான், றேமன்ட் றெனால்ட், கஜீஸ்காந்த் ஆகியோருக்கானருக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அருட்தந்தை மவுலிஸ், மூத்த பொதுநிலை மறையாசிரியர் ஜெயசீலன், அருட்தந்தை ஜோண் ஹில்ரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

