தூய ஆவியார் பெந்தகோஸ்து பெருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் நடைபெறும் தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை இவ்வருடம் மறைமாவட்டரீதியாக யாழ்ப்பாணம் மாங்குளம் ஆகிய இரு இடங்களில் நடைபெற்றது.

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மைதானம் மற்றும் மாங்குளம் இறை இரக்க தியான நிலையத்தில் வைகாசி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணியிலிருந்து தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இத்திருவிழிப்பு ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை, தீவகம், இளவாலை மற்றும் யாழ்ப்பாண மறைக்கோட்ட இறைமக்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட வழிபாடுகள் ஜெரிக்கோ செபம், திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் திருவிழிப்பு திருப்பலியும் தொடர்ந்து ஆராதனைகளும் இடம்பெற்றன.

மாங்குளத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி மறைக்கோட்ட இறைமக்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட வழிபாடுகள் ஜெரிக்கோ செபம் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் திருவிழிப்பு திருப்பலியும் தொடர்ந்து ஆராதனைகளும் நடைபெற்றன.

இவ்வழிபாடுகளில் ஏராளமான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

By admin