2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவின் நினைவுகளை முன்னிறுத்தி யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடரேற்றப்பட்டு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்டவரும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் முன்னைநாள் அதிபரும் தமிழீழ கல்வி மேம்பாட்டு துறை பொறுப்பாளருமான அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அவர்களுக்கான நினைவு நிகழ்வும் அன்றைய தினம் நடைபெற்றது.

இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் போராளிகளின் சரணடைதலுக்கு உதவியாக இருந்த அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அவர்கள் போராளிகளுடன் இணைத்து பேருந்து வண்டியில் கொண்டுசெல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அன்றைய தினம் யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஈகைச்சுடரேற்றப்பட்டு அருட்தந்தை ஜெராட் சவிரிமுத்து அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கபட்டு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

By admin