யாழ். மறைமாவட்டத்தில் ஐந்து திருத்தொண்டர்கள் புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் சித்தரை மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த திருத்தொண்டர்கள் யோண்சன் ஜோண் கில்ரன், ஸ்ரனிஸ்லொஸ் ஸ்ரிபன்ராஜ், யோண் பிலிப் யோண் எமில்ரன், கிளரேசியன் சபை திருத்தொண்டர்கள் மனுவற்பிள்ளை சுகந்தன் மற்றும் யேசுதாஸ் கிரிசாந்த் ஆகியோர் புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

