மன்னார் மறைமாவட்ட முன்நாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப் அவர்களின் ஜந்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு சித்திரை மாதம் 13ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து நினைவுப்பேருரையும் நடைபெற்றன.

நினைவுப்பேருரையை அரசியல் ஆய்வாளர் திரு. நிலாந்தன் அவர்கள் “தமிழ் அரசியல் மீது சிவில் சமூகங்களின் தார்மீகத் தலையீடு” என்னும் தலைப்பில் வழங்கினார்.

நினைவுப்பேருரை நிறைவில் மன்னார் நகரின் மத்தியில் அமைந்துள்ள ஆயர் அவர்களின் சிலைக்கு சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மன்னார் நகரசபை முதல்வர் திரு. வசந்தன், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin