முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான பாசறை புரட்டாதி மாதம் 04, 05ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் மாணவர் விடுதியில் நடைபெற்றது.
மறைக்கோட்ட பீடப்பணியாளர் இணைப்பாளர் அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நற்கருணை வழிபாடு, விளையாட்டுக்கள், உதவுமுறை பயிற்சி, தீப்பாசறை, அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வின்சன் அவர்களின் இளையோர் ஆன்மீகம் பற்றிய கருத்தமர்வு, கருத்துரைகள், திருப்பலி, அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் மறைமாவட்ட குருத்துவ அழைப்பு பற்றிய கருத்தமர்வு என்பவற்றுடன் டொண் பொஸ்கோ சிறிய குருமட மாணவர்களின் இறையழைத்தல் நிகழ்வும் இடம்பெற்றன.
மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 125 பீடப்பணியாளர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றி பயனடைந்தனர்.

