இளவாலை பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த இறையிரக்க ஆலய திறப்புவிழா புரட்டாதி மாதம் 09ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

இளவாலை புனித அன்னாள் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

யாழ். மறைமாவட்டத்தில் இரண்டாவதாக அமைக்கப்பட்டுள்ள இவ்இறையிரக்க ஆலயத்திற்கான அடிக்கல், 2023ஆம் ஆண்டு பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை எறிக்றொசான் அவர்களின் காலத்தில், அப்போதைய குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களால் நாட்டப்பட்டது.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இவ்வாலயம் தற்போது வழிபாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

By admin