மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை வவுனியா கியூரியா ஆச்சேஸ் விழா வைகாசி மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, சிறப்பு பவனி, மரியாயின் சேனை சங்கிலி செபம், திருப்பலி, அர்ப்பண வாக்குறுதிகளை புதுப்பித்தல், நற்கருனை ஆராதனை என்பன இடம்பெற்றன.

இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம், மகா இறம்பைக்குளம் பங்கு, இலுப்பைக்குளம் பங்கு, கோமரசங்குளம் பங்கு, பம்பைமடு பங்கு, வேப்பங்குளம் பங்கு மற்றும் கூமாங்குளம் ஆகிய பிரசீடியங்கள் ஒன்றாக இணைந்த இந்நிகழ்வுகளில் 125ற்கும் அதிகமான சேனை அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

By admin