வணக்கமாத சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட மாந்தை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இளையோர் மற்றும் திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான செபமாலை பேரணி வைகாசி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விடத்தல்தீவு பங்குதந்தை அருட்தந்தை ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை இராசானந்தம் நீக்கிலஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணி பள்ளமடு சந்தி வரவேற்பு திருச்சொருபத்தில் ஆரம்பமாகி விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை வழிபாட்டுடன் நிறைவடைந்தது.

நற்கருணை வழிபாட்டை காத்தான்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை செல்வநாதன் அவர்கள் நெறிப்படுத்தினார்.

இப்பேரணியில் மாந்தை மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த இளையோர், அருட்சகோதரிகள், திருப்பாலத்துவசபை மாணவர்கள், ஊக்குவிப்பாளர்களென 160க்கும் அதிகமானவர்கள் பங்குபற்றினர்.

By admin