யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மணற்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்கு இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சி வைகாசி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மணற்காடு புனித அந்தோனியார் மற்றும் குடத்தனை புனித இராயப்பர் ஆலயங்களில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு வளவாளர்கள் கலந்து கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், தலைமைத்துவ பயிற்சி, விளையாட்டுக்கள் என்பவற்றின் ஊடாக இளையோரை வழிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 60 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin