இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் இயங்கிவரும் எழுச்சியகம் மக்கள் வலுவூட்டல் மையம் ஆரம்பிக்கப்பட்டதன் 15ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு வைகாசி மாதம் 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
எழுச்சியக காப்பாளரும் இளவாலை புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பொதுச்செயலாளர் திரு. லக்ஸ்மன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் உயர்திரு. நாகலிங்கம் வேதநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மானிப்பாய் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திரு. யெசீதன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

