அளம்பில் சுவாமி தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த பொச்சு துகள்களாக்கும் தொழிற்சாலை திறப்புவிழா வைகாசி மாதம் 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சுவாமி தோட்ட பொறுப்பாளர் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்கள் கலந்து தொழிற்சாலையை ஆசீர்வதிக்க ஜேர்மன் நாட்டின் “Pax Christi” அமைப்பின் இணைப்பாளர் திரு திருமதி ஜெயரட்ணம் கில்டா ஆகியோர் திறந்துவைத்தனர்.

தொடர்ந்து முதல் இயந்திரத்தினை Tropicoir Lanka (Pvt) Ltd இன் திட்ட முகாமையாளர் திரு. லலித் அவர்களின் துணையோடு திரு திருமதி ஜெயரட்ணம் கில்டா ஆகியோர் இயக்கி ஆரம்பித்து வைத்தனர்.

இத்தொழிற்சாலை இயந்திரத்திரங்களுக்கான நிதியனுசரணையை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஊடாக “Pax Christi” நிறுவனம் வழங்கியுள்ளனர்.

By admin