சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தூய ஆவியார் பெருவிழா ஆயத்த வழிபாடு வைகாசி மாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்வழிபாடு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலி நிறைவில் தூய ஆவியார் வழிபாடு இடம்பெற்றதுடன் இவ்வழிபாட்டை இளவாலை மறைக்கோட்ட குருக்கள் நெறிப்படுத்தினர்.

இவ்வழிபாடுகளில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

By admin