புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய பக்தி சபையினர் இணைந்து முன்னெடுத்த செபமாலை பேரணி ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி ஆலயத்தில் அமைந்துள்ள லூர்த்து அன்னை கெபியில் ஆரம்பமாகி, ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.
அத்துடன் திருத்தந்தையின் வேண்டுகோளின் படி ஒரு மில்லியன் சிறுவர்கள் திருச்செபமாலை செபிக்கும் கருத்துக்கு அமைவாக புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய திருப்பாலத்துவ சபை சிறார்கள் இணைந்து முன்னெடுத்த சிறப்பு செபமாலை ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இச்சிறப்பு செபமாலையில் சிறார்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

