யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கத்தோலிக்க திருமறை தேர்வு இம்மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த தரம் 03-11 வரையான பாடசாலை மாணவர்கள் தோற்றவுள்ள இப்பரீட்சை அந்தந்த பாடசாலையில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கா.பொ.த சாதாரணதர பரீட்சையில் கிறிஸ்தவ பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி வருகின்ற சனிக்கிழமை நடைபெறவுள்ளன.
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையம், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை, இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை, அல்லைப்பிட்டி மொண்பேர்ட் சர்வதேச பாடசாலை, ஊர்காவற்துறை புனித மரியாள் றோ.க. மகளிர் வித்தியாலயம், நெடுந்தீவு மகாவித்தியாலயம், பருத்தித்துறை புனித தோமையார் றோ.க பெண்கள் பாடசாலை, சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி, அச்சுவேலி சென். திரேசாள் மகளிர் கல்லூரி, பளை மத்திய கல்லூரி, கிளிநொச்சி புனித திரேசாள் பெண்கள் கல்லூரி, வலைப்பாடு றோ.க.த.க பாடசாலை, முல்லைத்தீவு மகா வித்தியாலயம், புதக்குடியிருப்பு றோ.க. பாடசாலை ஆகிய இடங்களில் காலை 09 மணி முதல் மதியம் 01:30 வரை இடம்பெறவுள்ள இச்செயலமர்வுகளில் பங்குபற்றி பயனடையும் படி மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஸ்கரன்ராஜ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
