கரவெட்டி பங்கிற்குட்பட்ட சாரையடி புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
17ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ஜேம்ஸ்நாதன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
நற்கருணை விழா நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

