சில்லாலை புனித யாகப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த “அருளானந்தம்” மண்டப திறப்புவிழா சித்திரை மாதம் 10ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்து மண்டபத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் மற்றும் பங்குமக்கள் கலந்துகொண்டனர்.
ஆலயத்தின் முதலாவது குருவாகிய அருட்தந்தை அருளானந்தம் அவர்களின் குருத்துவ 40ஆவது ஆண்டு நிறைவாக அமைக்கப்பட்ட இம்மண்டபத்தின் கட்டுமான பணிகளுக்கான நிதியனுசரணையை அருட்தந்தை அருளானந்தம் மற்றும் அவரது சகோதரி திருமதி எலிஸ்ரன் மலர் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

