அமெரிக்கன் சிலோன் மிஸன் திருச்சபையின் யாழ். பிராந்திய கிறிஸ்தவ கல்விப் பணிமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பிள்ளைகள் விழா, புரட்டாதி மாதம் 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

அருட்பணியாளர் ரூபன் அவர்களின் தலைமையில் ‘ஆழத்திற்கு போவோம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். பிராந்தியத்தில் இயங்கிவரும் பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த பிள்ளைகள் கலந்துகொண்டனர்.

மானிப்பாய் UCC திருச்சபையில் காலை வழிபாட்டுடன் ஆரம்பமான இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை வரை பிள்ளைகளின் சாட்சியப் பவனி இடம்பெற்றது. தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் திருச்சபைகளுக்கிடையிலான குழுப்பாடல் மற்றும் வேதாகமப் புதிர்ப்போட்டி ஆகியன நடைபெற்றன.

மேலும், பிள்ளைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு, மனனம், கட்டுரை, கவிதை, சித்திரம், தனிப்பாடல் மற்றும் தனிநடனம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும், அன்றைய தினம் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் UCC திருச்சபையின் தலைவர் அருட்பணியாளர் தேவகுணானந்தன் மற்றும் துணைத் தலைவர் திரு. அருள் றொகான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

By admin