அருட்திரு மிலந்த கஜன் பெணாண்டோஇறைவனடி சேர்ந்தார்.
கொழும்பு மறைமாவட்டத்தில் பணியாற்றிவந்த அருட்திரு மிலந்த கஜன் பெணாண்டோ அவர்கள் 31ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
JAFFNA DIOCESE CATHOLIC NEWS – YARL MARAI ALAI TV 05.02.2022
https://youtu.be/A0yEzlz3Uok
புனித மொண்பர்ட் சர்வதேச பாடசாலை திறந்து வைக்கப்பட்டது.
அல்லைப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள புனித மொண்பர்ட் சர்வதேச பாடசாலை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களினால் 19ஆம் திகதி கடந்த புதன்கிழமை ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.
கண்டி மறைமாவட்டத்தின் புதிய ஆயாரக பேரருட்திரு வலன்ஸ் மென்டிஸ்
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களினால் கண்டி மறைமாவட்டத்தின் புதிய ஆயாரக நியமனம் பெற்ற பேரருட்திரு வலன்ஸ் மென்டிஸ் அவர்கள் 17ம் திகதி கடந்த திங்கட்கிழமை கண்டி மறைமாவட்ட ஆயராக தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
கலைத்தூது அழகியல் கல்லூரியின் 2022ஆம் ஆண்டிற்கான நுண்கலை வகுப்புக்கள்
திருமறைக் கலாமன்றத்தினால் நடாத்தப்பட்டடுவரும் யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியின் 2022ஆம் ஆண்டிற்கான நுண்கலை வகுப்புக்கள் 18ம் திகதி கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ளன.